தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் BA.4 என்ற புதியவகை கொரோனா தொற்று பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது: பல திரிபுகளை பெற்று வரும் கொரோனாவில் ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், காமா, கப்பா என நிறைய உருமாற்றம் நிகழ்ந்துவிட்டது. கொரோனோ தொடர்பாக 7 வகை வைரஸ் உருவானது.

தமிழகத்தில் இதுவரை பி ஏ 1 மற்றும் பி ஏ 2 மட்டும்தான் வெளிப்படையாகத் தெரிந்தது. தமிழகத்தில் தற்போது பி ஏ 4 கண்டறியப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு நாவலூர் பகுதியில் ஒருவருக்கு BA.4 கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இப்புதிய வகை கொரோனா ஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகளவில் பதிவாகியுள்ளது. சமீபத்தில், ஹைதராபாத்தில் ஒருவருக்கு இருந்ததை உறுதிசெய்தார்கள்.

இந்த கொரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இதுவரை தமிழகத்தில் ஒமிக்ரான் உள்பட, நான்கு வகை கொரோனா தொற்றுகள் மட்டுமே பதிவாகியுள்ளன எனத் தெரிவித்தார்.