இந்துஸ்தான் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை, இந்துஸ்தான் கலை மற்றும் கல்லூரியில், 19வது பட்டமளிப்பு விழா, சனிக்கிழமையன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் சீனிவாசன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளில் பயின்ற 1500 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. பாரதியார் பல்கலைக்கழக அளவில் தரவரிசையில் இடம் பெற்றுள்ள, 15 மாணவ மாணவிகளுக்கு ரொக்கபரிசுகளும், சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.

இந்த விழாவில், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், முதன்மை கல்வி அதிகாரி கருணாகரன், முதல்வர் பொன்னுசாமி, துறைத்தலைவர் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துக்கொண்டனர்.