இரத்தினம் கலை கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அபெக்ஸ் ஸ்கில் நிறுவனம் (TNASDC) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் கல்லூரி மாணவர்களுக்கு தொழில் முனைவோர், மாணவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தவும், தொழில் துறை சார்ந்த பாடத்திட்டம் மூலம் பயிற்சி வழங்கவும், குறிப்பிட்ட திறன் ஆகியவற்றை வடிவமைத்து மேம்படுத்தவும், மாணவர்களுக்கு லாஜிஸ்டிக்ஸ் துறையில் திறன்களை மேம்படுத்தவும் பயிற்சி அளித்து மாணவர்களை தொழில்துறைக்கு தயார்படுத்தவும் வழிவகை செய்து அதிக வேலைவாய்ப்பை பெறுவதற்க்கான வாய்ப்புக்களை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் உறுதி செய்துள்ளது. இரத்தினம் கலை கல்லூரி முதன்மை நிர்வாக அதிகாரி மாணிக்கம் ராமசாமி மற்றும் கிரிதரன் நிர்வாக இயக்குனர், (TNASDC) முன்னிலையில் கையெழுத்தானது.