எல்ஜி அறிமுகப்படுத்தும் போர்ட்டபிள் ஏர் கம்ப்ரஸர்

முன்னணி ஏர்-கம்பிரஸர் உற்பத்தியாளர்களில் ஒன்றான எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் ‘எஸ்கான் 2022’ இல் உயர் செயல்திறன், ஆற்றல் திறன் கொண்ட மின்சார மற்றும் டீசல் போர்ட்டபிள் ஏர் கம்ப்ரஸர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

மின்சாரத்தில் இயங்கும் PG 110E -13.5 மற்றும் டீசலில் இயங்கும் PG 575 – 225 கம்ப்ரஸர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. டீசலில் இயங்கும் PG 500-185, PG 330-100 மற்றும் மின்சாரத்தில் இயங்கும் PG 90E மற்றும் PG 55E டிராலி பொருத்தப்பட்ட போர்ட்டபிள் ஏர் கம்பிரஸர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து ISAAME எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் இயக்குனர் ராஜேஷ் பிரேம்சந்திரன் கூறுகையில்: எங்களது புதிய மின்சார மற்றும் டீசல் போர்ட்டபிள் ஏர் கம்ப்ரஸர்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். இது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த பராமரிப்பு செலவுகள், அதிக ஆற்றல் திறன் மற்றும் அதிக உற்பத்தித்திறனை வழங்கும்.

எல்ஜி இல், எங்கள் வாடிக்கையாளரின் கூறப்பட்ட தேவைகள், குறிப்பிடப்படாத தேவைகள் மற்றும் சரியான கம்ப்ரெஸ்ட் ஏர் தீர்வுகளை வழங்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்துவதாக கூறியுள்ளார்.