கே.பி.ஆர் கல்லூரியில் வேலைவாய்ப்பு தின விழா

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு தின விழா (PLACEMENT DAY 2022) அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்விற்குக் கல்லூரியின் முதல்வர் பாலுசாமி வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் கே.பி. ராமசாமி தலைமையுரை வழங்கினார். கல்லூரியின் ஆலோசகர் ராமசந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்விற்கு ஒடிசா, ஸ்டேட் பிலிம் அவார்டிமற்றும் தன்னம்பிக்கைப் பேச்சாளர், இத்திராணி சமந்தா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில்: மாணவர்கள் பணியிடத்தில் செயலாற்ற வேண்டிய முறைகள் குறித்தும் மாணவர்கள் வெற்றியாளராக உருவாவதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவாக கூறினார். மாணவர்கள் தங்கள் பணியில் சிறந்து விளங்க உத்வேகத்துடன் செயலாற்ற வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

2021-22ஆம் கல்வியாண்டில் 98.1% மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டனர். 52 மாணவர்களில் 29 பேர் Infosys நிறுவனத்திலும், 10 மாணவர்கள் HCL நிறுவனத்திலும், 4 மாணவர்கள் Extramarks நிறுவனத்திலும், 4 மாணவர்கள் Avasoft நிறுவனத்திலும், 4 மாணவர்கள் Disys நிறுவனத்திலும், 2 மாணவர்கள் TCS நிறுவனத்திலும், 1 மாணவன் wipro நிறுவனத்திலும், பிற மாணவர்கள் BSH நிறுவனத்திலும் பணியமர்த்தப்பட்டனர்.

சிறப்பு விருந்தினர் மற்றும்கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் ஆகியோர் மாணவர்களுக்கான பணிநியமன ஆணையை பெற்றோர்கள் முன்னிலையில் வழங்கினர்.