குமரகுரு நிறுவனங்களின் யுகம் சார்பில் மெகா டெக்னோ நிகழ்வு

கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் யுகம் 2022 நிகழ்வுகள், பயிலரங்குகள் நடைபெறயிருக்கின்றன. இந்நிகழ்வுகள் குறித்து ரேஸ்கோர்ஸ்சில் அமைந்துள்ள சைமா அரங்கில் செய்தியாளர்களின் முன்னிலையில் மாணவர்கள் புதன் கிழமையன்று தொகுத்து வழங்கினர்.

குமரகுரு தொழிநுட்ப கல்லூரியில், ஒவ்வொரு ஆண்டும் யுகம் என்ற தலைப்பில் விளையாட்டு, கலாச்சாரம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் வரிசையில் இந்தாண்டும், ‘யுகம் 2022 மெகா டெக்னோ’  நிகழ்வில் கலாச்சார விளையாட்டுகள், எண்ணற்ற போட்டிகள் மற்றும் பயிலரங்கம் நடக்கவிருக்கிறது.

இந்தாண்டு நடைபெறும் நிகழ்வில் 150க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள இருக்கும், மெகா டெக்னோ கலாச்சார விளையாட்டு விழா, கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில் நடைபெறுகிறது.

நாளை  தொடங்கி 21 தேதி வரை  நடைபெற இருக்கும், இதில் கல்லூரி மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக தொழில் நுட்பம், கலாச்சாரம், விளையாட்டு உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளும், தொழில் சார்ந்த 60 க்கும் மேற்பட்ட ஸ்டால்களும் அமைக்கப்பட உள்ளது

இதில், இன்ஸ்பைர் இந்தியா யூத் கான்க்ளேவ்வில் பேச்சுத்தொடர்கள், குழு விவாதங்கள், கதைகள், பயிலரங்கம் மற்றும் சார்பு நிகழ்ச்சிகள் நடப்பதாகவும் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினர்.