ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் விற்பனை கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மேலாண்மை துறை சார்பாக, மாணவ மாணவிகளின் தொழில் மற்றும் வர்த்தகம் குறித்த திறனை மேம்படுத்தும் விதமாக இரண்டு நாள் விற்பனை விழா எனும் கண்காட்சி துவங்கப்பட்டது.

இக்கண்காட்சியினை கல்லூரியின் துணை முதல்வர் கருப்புசாமி துவக்கி வைத்தார். இதில், மேற்கத்திய மற்றும் தென்னிந்திய உணவு வகைகள், பெண்களுக்கான ஆபரணங்கள், உடைகள், கைப்பைகள் என பல்வேறு துறை சார்ந்த 25க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெற்றன.

இது குறித்து மேலாண்மைத் துறை தலைவர் மேரி மெட்டல்டா கூறுகையில், மேலாண்மை தொடர்பான கல்வி பயிலும் போதே மாணவ மாணவிகளுக்கு வர்த்தகம் மற்றும் தொழில் மேம்பாட்டு தொடர்பான திறமைகளை வளர்த்து கொள்ள, கடந்த 10 ஆண்டுகளாக இது போன்ற நிகழ்வுகளை நடத்துவதாகவும், இதனால் கொள்முதல், விற்பனை, லாபம் போன்ற தொழில் தொடர்பான திறன்களை மாணவ மாணவிகள் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.