கே.எம்.சி.ஹெச் – ஜிட்டோ இணைந்து நடத்திய ‘ரன் ஃபார் மாம்’ மாரத்தான் போட்டி

கோவையில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையுடன் இணைந்து ஜிட்டோ (JITO) அமைப்பு ‘ரன் ஃபார் மாம்’ என்ற மாரத்தான் போட்டியை இன்று நடத்தியது.

அன்னையர் தினத்திற்காக தாய்மையை கொண்டாடுவோம் என்கிற கருப் பொருளில் இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

இதன் மூலம் திரட்டப்படும் நிதி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும், மார்பக மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் மற்றும் குழந்தைகள் புற்றுநோய்க்கு சலுகை கட்டணத்தில் மருத்துவ சிகிச்சைகள் அளித்திட கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை முன்வந்துள்ளது.

3,5,10 கிலோ மீட்டர் ஆகிய ஓட்டப்பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வினை கோவை டெரியர்ஸ் கமாண்டிங் அதிகாரி கர்னல் சிங் தன்வர், கே.எம்.சி.ஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி, ரிசர்ச் சென்டரின் இயக்குநர் மதுரா பழனிசாமி, கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் செந்தில்குமார், JITO மகளிர் பிரிவு தலைவர் பூனம் பாஃப்னா, JITO கோவை தலைவர் ரமேஷ் பாஃப்னா ஆகியோர் மரத்தானை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இப்போட்டியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண் பெண் என பலர் கலந்துகொண்டனர்.