சி.எம்.எஸ் கல்லூரியில் விளையாட்டு தினவிழா

சி.எம்.எஸ் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் 34-வது விளையாட்டு தினவிழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அர்ச்சுனா விருது பெற்ற மேனாள் இந்திய அணியின் தலைவர் டோம் ஜோஸப் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இக்கல்லூரி மாணவர்கள் தேசிய மற்றும் உலக அளவில் விளையாட்டுத்துறையில் சாதிக்க வேண்டும் என்று கூறினார்.

தேசிய, மாநில, மாவட்ட அளவில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழரின் விளையாட்டுப் பெருமையைப் பறைசாற்றிடும் மல்யுத்தம், களரி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

சி.எம்.எஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜ கோபால் விளையாட்டுத்திறனை மேம்படுத்த மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்து தலைமையுரை வழங்கினார்.

துணைத்தலைவர் அசோக், செயலாளர் வேணுகோபால், துணைச்செயலாளர் கெரீசன், பொருளாளர் ரவிக்குமார், கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர்.