இந்துஸ்தான் கல்லூரியில் தொழில்நுட்ப விழா

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதுகலை மற்றும் கணினி அறிவியல் ஆராய்ச்சி துறை சார்பில் ‘யூனிஃபெஸ்ட் 2022’ என்ற கல்லூரிகளுக்கு இடையேயான தொழில்நுட்ப விழா நடைபெற்றது.

விழாவின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் வரவேற்பு உரை வழங்கினார். இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் அறங்காவலர் சரசுவதி கண்ணைய்யன் மற்றும் செயலாளர் பிரியா சதீஷ்பிரபு பாராட்டு உரை வழங்கினர்.

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி தலைமையுரை ஆற்றினார்.

லண்டன் நியந்த்மீடியா & டெக்னாலஜி லிமிடெட் இயக்குனர், ஆனந்த் குமார் பொன்னுசாமி, எஸ்.ஆர் ஆப்டெக் & மேக் பிராண்ட் ஹெட் துணைத் தலைவர் பாவிகா சௌஹான், மேக்-கோயம்புத்தூர் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் செயின்ட் ஜூட்ஸ் பப்ளிக் பள்ளியின் நிர்வாக இயக்குனர் சம்ஜித் தனராஜன் ஆகியோர் நிகழ்விற்கு தலைமை வகித்தனர்.

இதில் 200 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்லூரிகளுக்கு இடையேயான இந்த தொழில்நுட்ப விழாவில் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, டாக்டர் எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்றனர்.