வி நிறுவனம், சோனிலிவ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியாவின் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான வி, சோனிலிவ் உடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டிருப்பதாக அறிவித்திருக்கிறது.

இந்த புதிய கூட்டு செயல்பாட்டின் மூலம், வி வாடிக்கையாளர்களுக்கு இடைவிடாமல் தொடர்ந்து பார்த்து ரசிக்க தகுந்த ப்ரீமியம் தரத்திலான படைப்புகளைப் பார்க்கும் வாய்ப்புகளையும், கூடுதல் பலன்களுடன் கூடிய ஆட்ஆன் டேடா பலன்கள் வழங்கப்படும்.

இதற்காக வி, தனித்துவமான பலன்களை ஒருங்கிணைத்து இருக்கும் புதிய ப்ரீபெய்ட் பேக்கை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய ப்ரீபெய்ட் பேக்கில் சோனிலிவ் பிரீமியம்-க்கான சந்தாவும், கூடுதல் டேடா பலன்களும் உள்ளடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு, வி புதிதாக ஆட்-ஆன் ரீசார்ஜ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் ரீசார்ஜ் மதிப்பு 82 ரூபாய். இந்த பேக் சோனிலிவ் பிரீமியம்–க்கான சந்தாவை 28 நாட்கள் வழங்குகிறது. மேலும் இத்துடன் கூடுதல் டேடா பலன்களாக 14 நாட்களுக்கும் மட்டும் பயன்படுத்த கூடிய வகையில் 4 ஜிபி டேடா அளிக்கப்படுகிறது.

அசத்தலான படைப்புகளின் பட்டியலை வி மூவிஸ் அண்டு டிவி பிரிவின் கீழ் வழங்குகிறது.
இச்சேவைகளை வி ஆஃப் வாடிக்கையாளர்கள் கண்டுக்களிக்க முடியும். விஎம்டிவி ஆஃப், 450-க்கும் அதிகமான லைவ் டிவி சேனல்களையும், லைவ் நியூஸ் சேனல்களையும், இதர ஒடிடி செயலிகளிலிருந்து ப்ரீமியம் தர படைப்புகளையும் வழங்குவது குறிப்பிடத்தக்கது.

 

SOURCE: PRESS RELEASE