கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி சார்பில் ஆனைமலையில் என்.எஸ்.எஸ்.முகாம்

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி சார்பாக ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அட்டகட்டி மற்றும் டாப்சிலிப் கிராமப் பகுதிகளில் ஒரு வார என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் நடைபெற்றது.

பொள்ளாச்சி வனச்சரக அலுவலகத்தில், மாவட்ட வன அலுவலரும், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனருமான கணேசன், பொள்ளாச்சி கோட்டம், ஆனைமலை புலிகள் காப்பக உதவி வன பாதுகாவலர் செல்வம் ஆகியோர்களின் ஆதரவோடு இந்த முகாம் நடைபெற்றது

முதல் நாள் ஐந்து குழுக்களோடு அட்டகட்டி சென்ற குழுவினர், அவ்வட்டாரத்தில் குழாய்கள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். மக்ககளுக்கு தண்ணீர் தேவைப்படும் பகுதிகளில் புதிய குழாய்கள் அமைக்கப்பட்டன.

 

இதனிடையே, அப்பகுதியில் உள்ள மின்சுற்று பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.

அதனை தொடர்ந்து, ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி கோட்ட வன அலுவலர் முனியாண்டி ஆகியோரின் ஆலோசனை கூட்டத்தில், அட்டகட்டியில் உள்ள அயல்நாட்டு வனவிலங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

2 ஆம் நாள், அப்பகுதியில் உள்ள நாகரூத்தில் தேவையான மின் வேலைகள் மற்றும் வெல்டிங்குடன் தொடங்கியது. சில பழங்குடியின மக்களுக்கு மூங்கில் தண்டுகளைப் பயன்படுத்தி வீடுகள் மற்றும் உலோகத் தாள்களைப் பயன்படுத்தி கதவுகள் மூலம் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மருத்துவமனைக்குச் செல்லும் மக்களுக்கும், சர்க்கார்பதியின் புறநகர்ப் பகுதியில் உள்ள மக்களுக்கும் அடிப்படை மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. குழந்தைகளுக்கு வைட்டமின், சொட்டு மருந்து, பெண்களுக்கான கர்ப்ப பரிசோதனை, இரத்த அழுத்த அளவு மற்றும் சர்க்கரை, கோவிட் தடுப்பூசி ஆகியவை இந்த முகாமில் மேற்கொள்ளப்பட்டது.