டாக்டர்.ஆர்.வி‌. கல்லூரியில் பேராசிரியர்களுக்கு பணி மேம்பாட்டுப் பயிற்சி

டாக்டர்.ஆர்.வி‌.கலை அறிவியல் கல்லூரியில் உள்தர உறுதிக் கட்டமைப்பின் சார்பில் 5 நாட்கள் இணையவழியில் பேராசிரியர்களுக்கான பணி மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்றார்‌. பயிற்சியின் முதல் நாள் கோவை, சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் உள்தரக் கட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெர்னார்டு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு “2022ஆம் ஆண்டில் தேசியத்தர மதிப்பீட்டுக் குழுவால் திருத்தி அமைக்கப்பட்ட கட்டமைப்புகள் குறித்த ஒரு கண்ணோட்டம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

நிகழ்வின் இரண்டாம் நாள் கர்நாடகா, மைசூர் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மேற்பார்வையாளர் மற்றும் மென்திறன் பயிற்சியாளர் ஸ்ரீரஞ்சனி மோக்சகுண்டம் கலந்துகொண்டு “கல்வியில் ஆராய்ச்சியின் முக்கியத்துவம்” குறித்து உரை வழங்கினார்.

மூன்றாம் நாள் நிகழ்வில் திருச்சி, ஜமால் முகம்மது கல்லூரியின் வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் பரமேஸ்வரி பங்கேற்று “திறந்தநிலை கல்வி வளங்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான பொதுவான உரிமங்கள்” குறித்து உரையாற்றினார்.

நான்காம் நாள் நிகழ்வில் சென்னை, எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வணிகவியல் துறைப் பேராசிரியர் கௌதம் பங்கேற்று “ஆராய்ச்சி அளவீடுகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ஐந்தாம் நாள் நிகழ்வில் திருவனந்தபுரம் ட்ரினிட்டி பொறியியல் கல்லூரியின் சிவில் என்ஜினியரிங் துறை உதவிப்பேராசிரியர் ஆனந்த லக்ஷ்மி கலந்துகொண்டு “ஒரு தரமான ஆராய்ச்சிக்கு பின்னால் உள்ள உத்திகள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.