எஸ்.என்.எம்.வி கல்லூரியில் ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு நடைபெற்றது.

மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையின் தேசிய பசுமைப்படையும் இணைந்து ஒருமுறை பயன்படுத்திய நொழியைக் கட்டுப்படுத்துவது மற்றும் மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கத்தை நடத்தியது.

இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கோவை வடக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் உதவிச் சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் கலந்து மொண்டு ஏழுவகையான நெகிழிப்பையில் அடங்கியுள்ள வேதிப்பொருட்களையும் அதனால் உண்டாகும் தீமைகளைப் பற்றியும் குறும்படம் மூலம் சிறப்புரையாற்றினார்.

கோவை கல்வி மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பாலுசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நெகிழிப்பைக்குப் பதிலாக மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவது குறித்து துண்டு பிரசுரங்கள் மூலம் மாணவர்களுக்கு சிறப்புரை வழங்கினார்.

இந்நிகழ்வில் எஸ்.என்.எம்.வி கல்லூரி முதல்வர் சுப்பிரமணி தலைமையேற்று நெகிழிப்பைகள் பயன்படுத்துவதால் சுற்றுச்குமலுக்கு ஏற்படும் தீங்கு, மஞ்சப்பை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை குறித்து தலைமையுரை வழங்கினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்றனர். அவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.