ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அளிக்கும் பயிற்சிக்கு தேர்வு

ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு பொறியியல் பயிலும் மாணவர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனம் அளிக்கும் 2022-ம் ஆண்டுக்கான தொழில் முனை பணி பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் மற்றும் வணிக அமைப்பு, முது நிலை கணினி அறிவியல், மற்றும் மின்னணுவியல் துறைகளை சார்ந்த 11 மாணவர்கள், இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் பயிற்சியில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அடுத்த மூன்று வாரங்களுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புகழ்மிக்க வல்லுனர்களால் பயிற்சி அளிக்கப்பட உள்ளனர்.

இம்மாணவர்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பல்வேறு மென்பொருள் தயாரிக்கும் குழுக்களில் இடம்பெற்று பயிற்சி பெறுவர். பயிற்சியின் இறுதியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலேயே மென்பொருள் பொறியாளராக பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ பணிபுரிவதற்கு இம்மாணவர்கள் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

முற்றிலும் இணைய வழியே நடைப்பெற உள்ள இந்த பணி பயிற்சி திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவரும் நிர்வாக அறங்காவலருமாகிய மலர்விழி அவர்கள், கல்லூரி முதல்வர் ஜேனட், துறை தலைவர்கள் மற்றும் மைக்ரோசாஃப்ட் பணி பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை வாழ்த்தினார்.