ஆர்.வி.எஸ். கல்லூரியில் செஞ்சிலுவை சங்க துவக்க விழா

கோவை ஆர்.வி.எஸ். கல்வியியல் கல்லூரியில் யூத் ரெட்கிராஸ் துவக்க விழா வியாழக்கிழமை அன்று கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது.

ஆர்.வி.எஸ். அறக்கட்டளையின் தலைவர் குப்புசாமி அவர்களின் நல்லாசியுடன் தொடங்கிய இவ்விழாவிற்கு, வருகைபுரிந்த அனைவரையும் கல்லூரியின் முதல்வர் ஜெயஸ்ரீ ராணி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பிரதிநிதி மோரிஸ் சாந்த குருஸ், கலந்து கொண்டு ரெட்கிராஸ் சொசைட்டியின் செயல்பாடுகள் குறித்து விவரித்தார்.

வருகைபுரிந்த அனைவருக்கும் கல்லூரியின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கல்லூரி வளாகத்திலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாணவ ஆசிரியர்கள் உறுதிமொழியை தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் ஜெபராஜ் நன்றியுரை வழங்கினார்.

இந்த நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட மாணவ ஆசிரியர்கள் பங்கேற்றனர்.