வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது இஸ்லாமியர்களே – ரம்ஜான் நிகழ்ச்சியில் ஜோ பைடன் பேச்சு

உலகம் முழுவதும் ரம்ஜான் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து அமெரிக்க அதிபர் மாளிகையில் அதிபர் ஜோ பைடன் திங்கள்கிழமை ரமலான் திருநாளை கொண்டாடினார்.

ரமலான் பண்டிகையையொட்டி வெள்ளை மாளிகைக்கு வந்திருந்த மக்களிடம் அமெரிக்க அதிபர் பேசுகையில், உலகம் முழுவதும் ரம்ஜான் விழா கொண்டாடப்படுகிறது. ஆனால் எல்லோராலும் உற்சாகமாக கொண்டாட முடியவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும்.

இஸ்லாமியர்கள் உலகம் முழுவதும் பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள். உலகளவில் வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது இஸ்லாமியர்கள்தான். யாரும் யாரையும் அவர்களின் மத அடையாளத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டவோ, ஒடுக்கவோ கூடாது.

இஸ்லாமியர்களால் தான் ஒவ்வொரு நாளும் அமெரிக்கா வலிமை பெற்று வருகிறது. அவர்களது உழைப்பு முக்கிய பங்கு வகித்துள்ளது.

பில் கிளிண்டன் அதிபராக இருந்த போது, வெள்ளை மாளிகையில் ஈத் பெருநாள் கொண்டாடும் வழக்கம் தொடங்கியது. டொனால்ட் ட்ரம்ப் அதிபராகியதும் இது நின்று போனது. இந்த ஆண்டு மீண்டும் தொடங்கியுள்ளது.