கே.ஐ.டி கல்லூரியில் கலாச்சார விழா

கே.ஐ.டி – கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் கலாச்சார விழா-2022 (CULTURAL FEST-2022) கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் நிறுவனத்தலைவர் பொங்கலூர்.நா.பழனிசாமி, துணைத்தலைவர் இந்துமுருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு கலாச்சார போட்டிகள் நடைப்பெற்றது. இந்த கலாச்சார நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் கல்லூரியின் நிறுவனத்தலைவர் பொங்கலூர்.நா.பழனிசாமி பேசும்போது, மாணவ,மாணவிகள் வாழ்வில் சிறந்த வெற்றியாளர்களாக உருவாவதற்கு கல்வியறிவுடன் தங்களது தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்வதிலும் ஆர்வம் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்களும், பரிசு வழங்கப்பட்டது.

மேலும் இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் மோகன்தாஸ்காந்தி, துணை முதல்வர் ரமேஷ், பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.