சேலத்தில் புதிய ஜூவல்ஒன் ஷோரூம் திறப்பு

சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரில் பிரம்மாண்டமான ஜூவல்ஒன் புதிய ஷோரூம் தொடங்கப்பட்டுள்ளது.

சேலத்தில் சிறிய இடத்தில் இயங்கி வந்த இந்த ஷோரூம், தற்போது பிரம்மாண்டமாக புதிய இடத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய ஷோரூமை எமரால்ட் ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குனர் சீனிவாசன், துணை மேலாண் இயக்குனர் சக்தி சீனிவாசன், இயக்குனர் நிஷ்டா சீனிவாசன் மற்றும், முக்கிய சிறப்பு விருந்தினர்கள், தலைமை செயல் அதிகாரி வைத்தீஸ்வரன் உள்ளிட்டோர் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.

இப்புதிய ஷோரூம் திறப்பு விழா குறித்து எமரால்ட் ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குனர் சீனிவாசன் கூறுகையில், “வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கவிருப்பதை எண்ணி நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளோம். சேலத்தில் தொடங்கி இருக்கக்கூடிய இந்தப் புதிய ஷோரூமானது, ஒரே தளத்தில் 2,534 சதுர அடி பரப்பளவுடன் அமைந்துள்ளது. எங்களுடைய ஷோரூம்களில் இதுவரை 30 அடிக்கும் அதிகமான முன்புற அகலம் கொண்ட முதல் ஷோரூம் இதுதான். இந்த ஷோரூமின் அடித்தளத்தில் வாகன நிறுத்துமிட வசதியும் இருப்பது வாடிக்கையாளர்களை நிச்சயம் மகிழ்ச்சி அடையச் செய்யும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய எமரால்ட் ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வைத்தீஸ்வரன், “சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப எங்கள் பிராண்ட் – ஜூவல்ஒன், தம்மை அவ்வப்போது புதுவிதமாக மாற்றி வடிவமைத்துக் கொண்டு வருகிறது. மக்களின் மனம் கவரும் வகையில், உகந்த விலை வைர நகைக் கலெக்ஷனான ‘சியரா’ (CHIARAA – Affordable Diamond Collection), பூக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நகைக் கலெக்ஷனான ‘அயானா’ (AYANAA – Floral Collction), நீர் வீழ்ச்சியை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட வைர நகைக் கலெக்ஷனான ‘நிர்ஜரா’ (NIRJHARA – Theme Based Diamond Collection), துடிப்பான ஜெம் ஸ்டோன் நகைக் கலெக்ஷனான ‘ஜீனா (ZHEENA – Vibrant Gem Stone Collection) ஆகிய நான்கு வகையான கலெக்ஷன்களை கடந்த 12 மாதங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது” என்றார்.

தொடக்க விழாச் சலுகையாக, ஜூவல்ஒன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தங்கம் மற்றும் வைர நகைகளை வாங்கும் போது எண்ணற்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.