மிஸ்டர்‌ தமிழ்நாடு போட்டி: ஐந்தாம் இடம் பெற்ற டாக்டர்.ஆர்‌.வி. கல்லூரி

இந்திய உடற்பயிற்சி கூட்டமைப்பு மற்றும் சத்தியமங்கலம் வி.பி.ஏ.பிட்னஸ் மையத்தின் சார்பில் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கே.வி‌.மஹாலில் கோவை மாவட்ட கிழக்கு மண்டல அளவிலான மிஸ்டர்‌‌.வி‌.பி‌.ஏ. ஃபிட்னஸ் கிளாசிக்-2022 என்ற சிறந்த உடல் கட்டமைப்புக்கான மிஸ்டர்‌ தமிழ்நாடு ஜூனியர், சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் காரமடை, டாக்டர். ஆர்‌.வி‌.கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாமாண்டு கணினி அறிவியல் துறையில் பயிலும் மாணவன் ரிசான்த்குமார் 70 கிலோ எடைப் பிரிவில் ஐந்தாம் இடத்தை பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவனை கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் ரூபா, அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரியின் நிர்வாக மேலாளர் பாராட்டினர்.