கங்கா மருத்துவமனை சார்பில் பக்கவாத மறுவாழ்வு மையம் துவக்கம்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கங்கா முதுகு தண்டுவட மறுவாழ்வு மையத்தில் புதிதாக பக்கவாதம் மற்றும் தலை காய சிறப்பு சிகிச்சை பிரிவை (மறுவாழ்வு மையம்) கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்து சிகிச்சை மையங்களை பார்வையிட்டார்.

கங்கா மருத்துவமனை தலைவர் சண்முகநாதன், இயக்குனர்கள் டாக்டர் எஸ். ராஜ சபாபதி, டாக்டர் எஸ். ராஜசேகரன், ரோட்டரி கிளப் ஆப் சென்ட்ரல் நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

20 ஆயிரம் சதுரடியில் ரூபாய் மூன்று கோடி செலவில் நவீன மருத்துவக் கருவிகள் இந்த மறுவாழ்வு மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிப்பு, தலைக்காயம் மற்றும் முதுகு தண்டுவட முறிவு ஆகிய மூன்று நோய்கள் மனிதர்களுக்கு பக்கவாதம் மற்றும் இரண்டு கால்கள் செயலிழப்பு பாதிப்புகளை உண்டாகிறது.

இந்த மூன்று நோய்களால் அதிகளவில் மக்கள் இறக்கின்றனர். சிறிய அளவில் பாதிப்பு ஆனாலும் நடமாட முடியாமல் படுக்கையிலேயே வாழ்ந்து கொண்டு சாதாரண வாழ்க்கையை வாழ முடியாமல் கஷ்டப்படுகின்றனர். இவர்களுக்காக இந்த மறுவாழ்வு மையம் அனைத்து சிகிச்சை நிபுணர்களும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை மையம் மூலம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக ரோட்டரி அமைப்புகள் அதிக அளவு நிதிகளை வழங்கி நோயாளிகளுக்கு உதவி வருவது வரவேற்கத்தக்கது என்று மருத்துவமனை இயக்குனர் ராஜசேகர் தெரிவித்தார்.