கே.பி.ஆர்.பொறியியல் கல்லூரியில் விளையாட்டு தின விழா

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் விளையாட்டு தின விழா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு கே.பி.ஆர் குழும நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.பி.ராமசாமி தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், விளையாட்டு என்பது உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் ஒரு தொடர் நிகழ்வு என்றார். மாணவர்கள் தினம் அதிகாலையில் எழும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டிலோ அல்லது உடற்பயிற்சியிலும் மாணவர்கள் ஈடுபட வேண்டும் என்றார், இதன் மூலம் மாணவர்களின் புத்தி கூர்மையாகவும், செயல்திறனும் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இவ்விழாவில் உடற்கல்வி இயக்குனர் ஆண்டறிக்கை வாசித்தார். மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்று பதக்கங்கள் பெற்றதையும் தடகளப் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசும் கோப்பையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த விழாவில் இந்திய கூடைப்பந்து அணியின் கேப்டன் பத்மஸ்ரீ அனிதா பால்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், பெண்கள் விளையாட்டு துறையில் அதிகம் சாதிக்க வேண்டும் எனவும், அதில் எவ்வளவு தடைகள் வந்தாலும் போராடி வெற்றி கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், கல்லூரியின் உள்கட்டமைப்பும் மற்றும் சூழல் மாணவர்கள் சிறந்த பயிற்சி பெறுவதற்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.