வேலம்மாள் பள்ளி மாணவன் சதுரங்கப் போட்டியில் சாதனை

ஆசிய நாடுகளுக்கான இணையவழி ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு செஸ் சாம்பியன்ஷிப் 2022-ல் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் வேலம்மாள் பள்ளி மாணவன் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

ஆசிய சதுரங்கச் சம்மேளனத்தின் சார்பாக இலங்கை சதுரங்கக் கூட்டமைப்பின் டோர்னெலோ பிளாட்பார்ம் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போட்டியில் 19 அணிகள் பங்கேற்றன.

இந்த போட்டியில், ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயாவின் 9-ஆம் வகுப்பு மாணவன் மிருத்யுஞ்சய், 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்று வெற்றி பெற்றுள்ளார்.