டென்னிஸ் போட்டியில் வேலம்மாள் மாணவி வெற்றி

தேசிய அளவிலான டென்னிஸ் தொடர் போட்டிகளில் வேலம்மாள் பள்ளி மாணவி வெற்றி பெற்றுள்ளார்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள சானியா மிர்சா டென்னிஸ் அகாடமியில் நடைபெற்ற தேசிய டென்னிஸ் தொடர் போட்டிகளின் 16 வயதிற்குட்பட்டோருக்கான ஒற்றையர் பிரிவில் வேலம்மாள் வித்யாலயா இணைப்புப் பள்ளியின் 8- ஆம் வகுப்பு மாணவி ஹரிதா ஸ்ரீ தங்கம் வென்றார்.

இறுதிப்போட்டியில் 6-1, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் ஆந்திராவைச் சேர்ந்த மிஸ் மனோக்ன்யா மதாசுவை விஞ்சிய அவர், வெற்றியை நிலைநிறுத்தினார். வெற்றி பெற்ற மாணவிக்கு வேலம்மாள் பள்ளி நிர்வாகம் வாழ்த்து தெரிவித்துள்ளது.