புதிய ‘ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் Z2’ இயர்போன் அறிமுகம்

ஒன்பிளஸ் நிறுவனம் ‘ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் Z2’ என்னும் இயர்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இது இந்தியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் கிடைக்கும். மேலும் இத்துடன் இந்த நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கான புதிய ரேடியன்ட் சில்வர் கலர் ‘ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ’ என்னும் துருப்பிடிக்காத இயர்போனையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் Z மற்றும் ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் Z பாஸ் ஆகிய தயாரிப்புகளை தொடர்ந்து மேம்பட்ட தொழில்நுட்பத்தில் புதிய ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் Z2 இயர்போனை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் வேகமாக சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. 10 நிமிடம் இந்த இயர்போனை சார்ஜ் செய்தால் 20 மணி நேரம் பயன்டுத்த முடியும்.

இந்த இயர்போன் உள்ளே தூசி அல்லது தண்ணீர் புகாதவாறு தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹைட்ரோபோபிக் நானோ-பூச்சை கொண்டுள்ள இது தங்களுக்குப் பிடித்த பாடல்களை கேட்கும் வசதியுடன் மழை காலத்திலும் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் பயன்படுத்தலாம். மேலும் இதை வசதியாக அணிந்து கொள்ளும் வகையில் காது மடல்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் Z2’ இயர்போன் ஏப்ரல் 5 முதல் ஒன்பிளஸ்.இன், ஒன்பிளஸ் ஸ்டோர் செயலி, அமேசான்.இன், பிளிப்கார்ட்.காம், ஒன்பிளஸ் பிரத்யேக ஸ்டோர்கள் மற்றும் பிற மொபைல் போன் ஸ்டோர்களிடம் கிடைக்கும். அதன் விலை 1999 ரூபாய் ஆகும். இதற்கான முன் பதிவு ஒன்பிளஸ்.இன், ஒன்பிளஸ் ஸ்டோர் செயலி, ஒன்பிளஸ் பிரத்யேக ஸ்டோர்களில் ஏப்ரல் 4-ந்தேதி துவங்குகிறது.

ரேடியன்ட் சில்வர் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ:

ரேடியன்ட் சில்வரில் வெளிவரும் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ வழக்கமான ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோவிலிருந்து பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது – 11 மிமீ பெரிய டைனமிக் இயக்கிகளுடன் இணைக்கப்பட்ட 40 டிபி வரையிலான சக்திவாய்ந்த இரைச்சல் இல்லாத சத்தத்துடன் – அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது துருப்பிடிக்காத எஃகினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

ரேடியன்ட் சில்வர் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ ஏப்ரல் 5 முதல் ஒன்பிளஸ்.இன், ஒன்பிளஸ் ஸ்டோர் செயலி, அமேசான்.இன், பிளிப்கார்ட்.காம், ஒன்பிளஸ் பிரத்யேக ஸ்டோர்கள் மற்றும் பிற மொபைல் போன் ஸ்டோர்களிடம் கிடைக்கும். அதன் விலை 9990 ரூபாய் ஆகும். இதற்கான முன் பதிவு ஒன்பிளஸ்.இன், ஒன்பிளஸ் ஸ்டோர் செயலி, ஒன்பிளஸ் பிரத்யேக ஸ்டோர்களில் ஏப்ரல் 4-ந்தேதி துவங்குகிறது.

 

Source: Press Release