சவுரிபாளையம் பகுதியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது குறித்து கலந்தாலோசனை

சவுரிபாளையம் ஹட்கோ அடுக்குமாடி குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதால் புதிய வீடுகள் கட்டுவது குறித்து அடுக்கு மாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகளிடம் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் (52 வது வார்டு மாமன்ற உறுப்பினர்) கேட்டறிந்தார்.

கோவை மாநகராட்சி, 52 வது வார்டு, சவுரிபாளையம் ஹட்கோ பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

அவற்றை இடித்து விட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது சம்பந்தமாக ஏற்கனவே தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி நேரில் வருகை தந்து இது குறித்து ஆய்வு செய்து பேசியுள்ளார்.

இது குறித்து, தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களிடமும் சவுரிபாளையம் அடுக்குமாடி உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் சவுரிபாளையம் ஹட்கோ அடுக்குமாடி உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் சங்க நிர்வாகிகளுடன் (பி.எஸ்.ஜி.ஹட்கோ) கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் கலந்துரையாடினார்.

தொடர்ந்து, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் புதிய வீடுகள் கட்டுவது குறித்து அடுக்கு மாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

பீளமேடு பகுதிக்கழகம் -1பொறுப்பாளர் வே. பாலசுப்ரமணியம், வட்டக்கழகப் பொறுப்பாளர் தகடூர் செல்வம், ஹட்கோ நிர்வாகிகள் ராஜாராம், கண்ணதாசன், சந்திரன், மாணிக்கம், சம்பத்குமார், ஸ்ரீதர், பாண்டியன், செந்தில்நாதன், மயில்வாகனம், சண்முகானந்தம், ராஜ்குமார், சிவகுமார், வேணுகோபால் மற்றும் நிர்வாகிகள, கழக நிர்வாகிகள் ஆகியோர் இந்த கலந்தாலோசனையில் பங்கேற்றனர்.