கோவையில் ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை அணிகலன்கள், வீட்டு அலங்கார பொருட்கள் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் வகையில் ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண அரங்கில் ஏழாவது ஆண்டாக தமது விற்பனை கண்காட்சியை துவங்கியுள்ளது.

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், நகைகளுக்கென நூறுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக இக்கண்காட்சியினை கோ க்ளாம் வாடிக்கையாளர்கள் டாக்டர் லக்ஷ்மி ப்ரியா, பத்மா பாலமுருகன், சுவாதி ஜெகதீஷ், சர்மிளா குப்தா, ஜெய் ஸ்ரீ பிரசாத் கோட்டா, மூகாம்பிகா ரத்தினம், டாக்டர் சங்கீதா மேத்தா உள்ளிட்டோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஹீனா மற்றும் ராகுல் ஆகியோர் ஷாப்பிங் கண்காட்சி குறித்து பேசுகையில், இங்கு ஷாப்பிங் செய்ய வருபவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களுக்கான அரங்குகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் நலன் கருதி இலவச ஸ்டால்களும் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

கண்காட்சியில் டில்லி, ஜெய்ப்பூர், புனே என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிரத்யேகமாக ஆடை, ஆபரணங்கள், குழந்தைகளுக்கான கைவினை பொருட்கள், இந்தியாவின் பிரபல கலைஞர்களால் உருவாக்கப்பட்ட வீட்டு அலங்கார பொருட்கள் மற்றும் பெண்களுக்கான, ஜிமிக்கி கம்மல், வளையல், வெள்ளி அணிகலன்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக பெண்கள் பயன்படுத்தும் அழகுக்கலை பொருட்கள், சிகை அலங்கார பொருட்கள், முக அலங்கார பொருட்கள், வாசனை திரவியங்கள் ஆகியவற்றிற்கான தனி தனி அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப் பட்டுள்ளதாகவும், மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சிக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வருவதாக தெரிவித்தனர்.