வைரல் ஆகும் தோனி – கம்பீர் புகைப்படம்!

எம்.எஸ் தோனியும், கவுதம் கம்பீர் இருவரும் மைதானத்தில் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் வியாழக்கிழமை மோதிக் கொண்டன. இப்போட்டியில் லக்னோ அணி சென்னை அணியை தோற்கடித்தது.

போட்டி முடிந்தபின் சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான தோனியும், கவுதம் கம்பீரும் சந்தித்துப் பேசினர். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை கவுதம் கம்பீர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ‘மீண்டும் கேப்டனை சந்தித்ததில் மகிழ்ச்சி’ என குறிப்பிட்டுள்ளார்.

தோனிக்கும் கம்பீருக்கும், இடையே மோதல் இருப்பதாக கூறப்படும் நிலையில், நேற்றைய போட்டியின் போது தோனியுடன் கம்பீர் பேசிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு ஆலோசகராக, இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர், நியமிக்கப்பட்டுள்ளார்.