கோவை – போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கம்

கோவை போத்தனூர் வழித்தடத்திலிருந்து எர்ணாகுளம் முதல் சென்னை வரை செல்லும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை சென்ட்ரல் – எர்ணாகுளம் விரைவு சிறப்பு ரயில் (எண்: 06007) ஏப்ரல் 13ம் தேதி இரவு 7 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.

இதேபோல, எர்ணாகுளத்தில் இருந்து 17ம் தேதி இரவு 10.40 மணிக்குப் புறப்படும் விரைவு சிறப்பு ரயில் (எண்: 06008) மறுநாள் காலை 10.25 மணிக்கு சென்னை சென்றடையும்.

இந்த ரயிலானது, ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.