சூரிய ஒளி பேருந்தில் வசிக்கும் மனிதர்: இரத்தினம் கல்லூரிக்கு வருகை

இரத்தினம் கல்விக் குழுமத்திற்கு இந்தியாவின் சூரிய ஒளி மனிதர் என்று அழைக்கப்படும் பேராசிரியர் சேட்டன் சிங் சோளங்கி வருகைபுரிந்தார்.

இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் பயிலும் மாணவர்களிடத்தில் எனர்ஜி ஸ்வராஜ் யாத்ரா பற்றி விரிவான உரை ஆற்றினார். அவர் பேசுகையில் பருவநிலை மாற்றம் நமது சமுதாயத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அதற்கு மாற்று வழிகண்டறிய வேண்டும் என கூறினார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பேராசிரியர் சேட்டன் சிங் சோளங்கி அடல் இன்குபேஷன் சென்டருக்கு வருகை புரிந்தார். அடல் இன்குபேஷன் சென்டரின் முதன்மை நிர்வாக அதிகாரி மதன்.ஆ.செந்தில் தலைமை தாங்கினார். அடல் இன்குபேஷன் சென்டரின் இயக்குனர் நாகராஜ் முன்னிலை வகித்தார்.

பேராசிரியர் சேட்டன் சிங் சோளங்கி நமது பசுமை சூழல் சார்ந்த தொழில் முனைவோர்களைப் பற்றியும் கேட்டறிந்தார். நிகழ்ச்சிக்கு பின்னர் சிறப்பு விருந்தினர், இதுநாள் வரையில் வசிக்கும் சூரிய ஒளி பேருந்தை மாணவர்கள் அனைவரும் பார்வையிட்டனர்.

அடல் இன்குபேஷன் சென்டரின் முதன்மை நிர்வாக அதிகாரி மதன்.ஆ.செந்தில், அடல் இன்குபேஷன் சென்டரின் இயக்குனர் நாகராஜ் ஆகியோர் சூரிய ஒளி பேருந்தைப் பற்றியும், சிறப்பு விருந்தினரின் யாத்திரைப் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

மேலும், பேராசிரியர் சேட்டன் சிங் சோளங்கி பயணத்தின் போது சிறப்புரைகள், கருத்தரங்குகள், விழிப்புணர்வு பேரணிகள் ஆகியவற்றை நடத்தி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் .