கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை முகாம்

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க எச்.பி.வி மருத்துவ பரிசோதனை முகாம் ஏப்ரல் 1 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்க எச்.பி.வி பரிசோதனை முகாம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்கிறார் கே.எம்.சி.ஹெச் மகளிர் புற்றுநோய் நிபுணர் டாக்டர் அன்புகனி சுப்பையன்.

எச்.பி.வி பரிசோதனை குறித்து அவர் கூறியதாவது: கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஹூயூமன் பாப்பிலோமா வைரஸ் (எச்.பி.வி) மூலம் ஏற்படுகிறது. இவ்வைரஸ் தொற்றுக்கு எந்த அறிகுறியும் கிடையாது. குறிப்பிட்ட காலத்தில், பரிசோதனை மட்டும் தான் இத்தொற்றை கண்டறிய உதவும். பிரச்னை இருந்தால், தான் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதில்லை. பிரச்னை ஏற்படாமல் இருக்கவும் பரிசோதனை அவசியம்.

கடந்த, 1970 ம் ஆண்டு முதல், இதற்காக ‘பேப் ஸ்மியர்’ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது வைரஸ் பாதிப்பை நேரடியாக கண்டறிய எச்.பி.வி பரிசோதனை பயன்படுகிறது

பேப் ஸ்மியர் பரிசோதனையில், கர்ப்பப்பை வாயில் இருந்து செல் எடுக்கப்பட்டு அது பரிசோதிக்கப்படும். பரிசோதனையில் செல்லில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களை கொண்டு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறித்து கண்டறியப்படும். இப்பரிசோதனையின் மூலம் பெறப்படும் முடிவுகளின் துல்லியத்தனமை, 60 – 70 சதவீதம் இருக்கும்.

எச்.பி.வி பரிசோதனையில், செல்லை நேரடியாக பகுப்பாய்வு செய்து அதில் எச்.பி.வி வைரஸ் உள்ளதா என, கண்டறியபபடுகிறது. இப்பரிசோதனையின் துல்லியத்தன்மை பல மடங்கு அதிகம். இப்பரிசோதனையில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அல்லது ஏற்படாது என்பதை துல்லியமாக கூற முடியும். எச்.பி.வி வைரஸ் பாதிப்பு ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது தான் பேப் ஸ்மியர் பரிசோதனை பயன்படும். ஆனால், எச்.பி.வி பரிசோதனை பாதிப்பு ஏற்படும் முன்னரே கண்டறிய உதவுகிறது.

பேப் ஸ்மியர் பரிசோதனையை பெண்கள், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டும். ஆனால், எச்.பி.வி பரிசோதனை முடிவுகளின் துல்லியத் தன்மையால் தற்போது, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்தாலே போதும். இன்னும் ஓராண்டில், இப்பரிசோதனையை, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்தால் போதும் என்ற நிலை வர உள்ளது எனக் கூறுகிறார்.

கே.எம்.சி.ஹெச் முதன்முறைகாக எச்.பி.வி பரிசோதனையை மிகக்குறைந்த கட்டணத்தில் முகாம் மூலம், பெண்களுக்கு வழங்குகிறது.

மேலும் விபரங்களுக்கும், பரிசோதனைக்கான முன்பதிவிற்கும் மொபைல்: 87549-87509 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.