காலநிலை மாற்றமும் வேளாண் உத்திகளும்: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் சர்வதேச கருத்தரங்கு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலை மாற்றத்திற்கு உகந்த வேளாண் உற்பத்தி உத்திகள் குறித்த சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.

இத்துவக்க விழாவில், பேராசிரியா மற்றும் தலைவர் காலநிலை ஆராய்ச்சி மைய ஒருகிணைப்பாளர் சுப. ராமநாதன் வரவேற்புரையாற்றி கருத்தரங்கை துவக்கி வைத்தார்.

இக்கருத்தரங்கின் தலைவர் மற்றும் இயக்குனருமான கீதாலட்சுமி இந்த சர்வதேச அளவிளான கருத்தரங்கின் முக்கியதுவமான காலநிலை மற்றம் பயிர் உற்பத்தி உழவியல் தொழில்நுட்பங்கள், அங்கக வேளாண் தொழில்நுட்ப உத்திகள் மற்றும் கொள்கைகள், பயிர்வினையியல் தொழில்நுட்பங்கள் மூலம் மகசூல் அதிகரிப்பு போன்றவற்றின் முக்கியத்துவத்தை கூறினார்.

பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குனர் சுப்பிரமணியன், இயற்கை சார்ந்த வளங்களை பாதுகாக்கவும், இந்த காலகட்டதிற்கு மிகவும் அவசியமான தானியங்கி வானிலை மையத்தின் பயன்பாட்டினையும் முக்கியதுவத்தையும் கூறினார்.

காலநிலைக்கேற்ற விதையும் விதை பராமரிப்பும், வறட்சி தாங்கி வளரக்கூடிய பயிர்களும், தொலைதூர தொழில்நுட்பங்கள் பயிர் உற்பத்தியில் பயன்படுத்த வேண்டும் என்பதனையும் கூறினார்.

பல்கலைகழக பதிவாளர் மற்றும் செயல் துணைவேந்தர் கிருட்டிணமூர்த்தி, பஞ்ச பூதங்களான நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றை பாதுக்காக்கவும் மாசுபடாதவாரும் இயற்கை வேளாண்மை தொழில்நுட்ப உத்திகளை கடைபிடிக்க வேண்டுமென்று வழியுறுத்தினார்.

முதன்மை பேச்சாளரான பிருடின் ஜெ. மோஹாபத்ரா (டைரக்டர் ஜெனரல்) புதுடில்லி, காலநிலை இடர் மேலாண்மை பற்றி பேசினார்.

இக்கருத்தரங்கின் போது ஆராய்ச்சி கட்டுரை தொகுப்பு புத்தகத்தையும் மற்றும் கையேடுகளான அங்கக வேளாண்மை, தொழில்நுட்பம் சார்ந்த மண்புழு தயாரிப்பு, பயிர்சத்து மேலாண்மை (காணொளி தொகுப்பு) ஆகியவற்றை விவசாயிகளுக்கும், வேளாண் விஞ்ஞானிகளுக்கும் பயண்படுத்துவதற்க்காக புத்தகங்களை வெளியிட்டனர்.

மேலும் பல்கலைக்கழக அதிகாரிகள், துணை தலைவர்கள், பேராசியர்கள் மற்றம் ஆராய்ச்சி மாணவர்கள் உள்பட 300 க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.