லண்டனில் தொழிலதிபர் விஜய் மல்லையா கைது

பல்வேறு கடன் சர்ச்சையில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் விரைவில் நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் விஜய் மல்லையா லண்டன் தப்பி சென்றார். அங்கிருந்து அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவருக்கு எதிராக கோர்ட் மூலம் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து மத்திய அரசு சார்பில் அவரை நாடு கடத்தவும் இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில், லண்டனில் ஸ்காட்லாந்து போலீசார் விஜய் மல்லையாவை கைது செய்தனர். தொடர்ந்து வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.