மாநில அளவிலான கபடி போட்டியில் வெற்றி வாகை சூடிய கற்பகம் பல்கலைக்கழகம்

கடந்த பிப்ரவரி மாதம் 5 முதல் 6ம் தேதி வரை நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் வாடிப்பட்டியில் நடைபெற்றது.

இதில் 70 கிலோ எடைப் பிரிவில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 70க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர். இப்போட்டியில் காலிறுதிப் போட்டியில் கற்பகம் பல்கலை, ஆண்ட குலம் ஸ்போர்ட்ஸ் கிளப் தஞ்சாவூர் அணியுடன் விளையாடி 20 – 17 என்ற புள்ளிகள் அடிப்படையில் கற்பகம் பல்கலை. அணி வெற்றி பெற்றது, அரையிறுதிப் போட்டியில் பெரிய குருவம்பட்டி திருச்சி அணியுடன் விளையாடி 35க்கு 14 என்ற புள்ளி அடிப்படையில் கற்பகம் பல்கலை அணி வெற்றி பெற்றது.

இறுதிப்போட்டியில் கற்பகம் பல்கலை அணி வாதிரிப்பட்டி புதுக்கோட்டை அணியுடன் மோதியது இதில் கற்பகம் பல்கலை அணி அபாரமாக விளையாடி 54 -21 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி வாகை சூடியது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பகம் பல்கலைக்கழக நிர்வாகம், பதிவாளர் பழனி சுவாமி, உடற்கல்வி துறை இயக்குனர் சுதாகர், பயிற்சியாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.