முன்னாள் மாணவர்கள் சார்பில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கான ஒப்புதல் கடிதத்தை முன்னாள் மாணவர் சங்கத்தினர், முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் அவர்களிடம் வழங்கினர்.

இக்கல்லூரியில், படித்த முன்னாள் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் சங்கம் தொடங்கி, கல்லூரிக்கும் இங்கு படிக்கும் மாணவர்களுக்கும் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

முன்னாள் மாணவர்கள் பலர் தொழில்முனைவோர்களாகவும், தொழிலதிபர்களாகவும் உள்ளனர். அவர்கள் தங்கள் நிறுவனங்களில் பணிபுரிய, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பளித்து வருகின்றனர். இவர்கள் கோவையில் 9 நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். அந்நிறுவனங்களில் பணிபுரிய, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க உள்ளனர்.

இதன்படி கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கான ஒப்புதல் கடிதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சிவக்குமாரிடம், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பிரபு, வேலைவாய்ப்பு ஒப்புதல் கடிதத்தை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

இதன்மூலம் பிளாட்டோ அகாடமி, சுரபி புல்லியன், மெகா எண்டர்பிரைசஸ், ஆர்.பி. ஏஜென்சீஸ், சிந்தியா பிளாஸ்டிக் இண்டஸ்ட்டிரிஸ், ஆர்.வி.எஸ். ஏஜென்சீஸ், பௌபௌ பிளஸ், பிரேம்கண்ணா கேட்டரிங் அண்டு எக்யூப்மென்ட்ஸ், ஐ.டி. வேர்ல்டு ஆகிய நிறுவனங்களில் இக்கல்லூரியின் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற உள்ளனர்.