என்ன!!!!!! கார் ஓட்ட விமான ஓட்டுநர் உரிமம்மா!!!!!!!

ஏரோமொபில் எனும் புதிய பறக்கும் கார், மார்க்கஸ் மொனாக்கோ சூப்பர் கார் நிகழ்ச்சியில் வரும் 20-ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த கார் வானிலும் சாலையிலும் பயணிக்கும் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏரோமொபில் நிறுவனமானது பத்து ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு இந்த பறக்கும் காரை வடிவமைத்துள்ளது.

இதை பயன்படுத்துவோர் சாலை ஓட்டுநர் உரிமம் மட்டும் இருந்தால் போதாது, விமான ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பது கட்டாயமாகும். 5 அடி நீளம் கொண்ட இந்தப் பறக்கும் காரில், இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து பயணிக்கலாம்.

எடைகுறைவான ஸ்டீல் பிரேம் ஒர்க் மற்றும் கார்பன் கோட்டிங் உடன் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த பறக்கும் கார், விமானமாக மாறும் போது 26அடி அகலத்துடனும் 19 அடி நீளத்துடனும் இருக்கும். சாலையில் செல்லும்போது 310மைல்கள் வரை அசால்டாக பயணிக்கும்.