இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்தோர் எண்ணிக்கை 3,623 ஆக உயர்வு

இந்தியாவில் 27 மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் தற்போதய நிலவரப்படி ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,623 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், 1,409 பேர் ஒமைக்ரான் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை மராட்டியம், டெல்லி, ராஜஸ்தான், கேரளா, கர்நாடகம், குஜராத், தமிழ்நாடு, தெலுங்கானா, அரியானா, ஒடிசா, உத்தரபிரதேசம், ஆந்திரா, உள்ளிட்ட 27 மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பரவியுள்ளது. மராட்டியம், டெல்லி, ராஜஸ்தான், கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள், ஒமைக்ரானின் மோசமான பாதிப்புக்குள்ளான முதல் 5 மாநிலங்கள் ஆகும்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 513 பேரும், கர்நாடகாவில் 441 பேரும், ராஜஸ்தானில் 373 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 333 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 185 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.