எல் & டி சார்பில் சமூக வளர்ச்சி திட்டங்கள் ஒப்படைப்பு

லார்சன் அண்டு டுப்ரோ நிறுவனம் சமூக பொறுப்பு முன்னெடுப்பின் கீழ் உருவாக்கிய இரண்டு சமூக வளர்ச்சி திட்டங்களை தமிழக அரசின் வேளாண்துறை, துணை இயக்குநர் ஷபி அகமது வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி சூலூரில் உள்ள கலங்கல் கிராமத்தில் நடைபெற்றது.

இந்த திட்டங்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு மாவட்ட கிராம மேம்பாட்டு ஆணையத்தின் திட்ட இயக்குநர் மற்றும் கூடுதல் இயக்குநர் முருகன் அவர்களால் தொடங்கப்பட்டது. எல் அண்டு டி நிறுவனத்தின் அதன் சமூக பொறுப்பு முன்னெடுப்பின் கீழ் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம், கிராமப்புறங்களில் வேளாண், வடிகால் மற்றும் கல்வி மேம்பாட்டு பணிகளை செய்து வருகிறது.

எல் அண்டு டி நிறுவனத்தின் ஒருங்கிணைந்த சமூக வளர்ச்சி திட்டம், மடுக்கரையில் 2 ஆயிரம் ஹெக்டேர் சூலூரில் 1,585 ஹெக்டேரையும் உள்ளடக்கியுள்ளது. இந்த திட்டம் உள்ளுர் மக்களின் அதிலும் குறிப்பாக பெண்களின் பிரதான பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகிறது. மண் மற்றும் நீராதாரங்களில் தொடங்கி, படிப்படியாக பல்வேறு கட்டங்களாக வடிகால் வசதிகளை மேம்படுத்துதல், பள்ளி கட்டிடங்களை மராமத்து செய்தல் என இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சியில் எல் அண்டு டி நிறுவனத்தின் கார்ப்பரேட் மையத்தின் தலைவர் டாக்டர் ஹசீத் ஜோசிபுரா கூறுகையில், “ஒருங்கிணைந்த சமூக மேம்பாட்டு திட்டத்தில் எல் அண்டு டி நிறுவனத்தின் செயல்பாடுகள் தனித்துவமானவை. உள்ளுர் மக்களுக்கு நீண்ட கால நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.

2015 இல் எல் அண்டு டி நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த சமூக மேம்பாட்டு திட்டப் பணிகள் கிராமப்புற மக்களால் தொடர்ந்து முன்னெடுத்து செல்லப்படுவதே எல் அண்டு டி நிறுவனத்தின் சமூக பொறுப்பு பொது மக்களுக்கு மிகவும் பலனளிக்கிறது என்ற சான்றுகளில் ஒன்றாகும்.” என்றார்.

 

Source: Press Release