இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை மாநகர்  கிழக்கு மாவட்டம், 49 வட்டம், பாப்பநாயக்கன் பாளையம், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக  இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, துளசி பார்மசி, கோவை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை, சர்க்கரை, மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்வினை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் Ex MLA துவக்கி வைத்தார். பகுதி கழக செயலாளர் நாகராஜ்,  வட்ட பொறுப்பாளர்கள் எத்திராஜ், தாஸ், ராஜேந்திரன், நாகராஜ் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை மாணவரணி துணை அமைப்பாளர் ஜெய்சங்கர் ஏற்பாடு செய்திருந்தார்.