கோவையில் குழந்தைகளை குஷிப்படுத்திய சோனி ஒய்.ஏ.ஒய் ‘‘பன் கி சவாரி’’ வேன்

குழந்தைகளுக்கான கேளிக்கை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் சோனி ஒய்ஏஒய் தொலைக்காட்சியில் புகழ் பெற்ற கார்டூடன் தொடரான ‘ஓகியும் கரப்பான் பூச்சிகளும்’ தொடர் ஒளிபரப்பாகி  வருகிறது. இது குழந்தைகளிடம் வரவேற்பை பெற்ற தொடராகும்.

இதன் மகிழ்ச்சியை நேரடியாக குழந்தைகளுக்கு வழங்கும் விதமாக ‘‘பன் கி சவாரி’’ என்னும் நிகழ்ச்சி ஒன்றை இந்த தொலைக்காட்சி வழங்குகிறது. இதன் மூலம் வேன் ஒன்று தமிழகம் முழுவதும் சென்று பல்வேறு போட்டிகளையும் விளையாட்டுகளையும் குழந்தைகளுக்காக நடத்துகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்த வேன் கோவையில் கடந்த 4 நாட்கள் முகாமிட்டு குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தியது. கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு பிரபலமான கார்டூன்களுடன் விளையாடி மகிழ்ந்ததுடன் பரிசுகளையும் வென்றனர்.

இந்த வேன் கடந்த 15–ந்தேதி தனது பயணத்தை துவங்கியது. இதன் பயணம் வரும் ஜனவரி 10–ந்தேதி நிறைவடைகிறது. 25 நாள் பயணத்தில் இந்த வேன் வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு செல்கிறது.

கோவை வந்த வேன் முக்கிய குடியிருப்பு பகுதிகள் மற்றும் பிரபலமான இடங்களுக்கு சென்று அங்குள்ள குழந்தைகளிடம் மிகுந்த உற்சாகத்தை கொண்டு வந்தது. இதில் அற்புதமான நிகழ்ச்சிகளும் குழந்தைகளுக்கான விளையாட்டுகளும் இடம் பெற்றது.

அத்துடன் குழந்தைகளின் விருப்பமான கதாபாத்திரமான ‘ஒபோச்சமா குன்’  தொடரின் சிறப்பு முன்னோட்டமும் இடம் பெற்றது. இந்தப் பயணத்தின் போது வேன் சென்ற ஒவ்வொரு இடத்திலும் குழந்தைகள் தங்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்தனர். மேலும் பல்வேறு விதமான விளையாட்டுகளில் கலந்து கொண்டும், தங்களுக்கு பிடித்தமான கதாபாத்திரங்களையும் பார்த்தும் மகிழ்ந்தனர்.