ஆர்.வி. கல்லூரியில் ‘எஸ்ஸென் ஃபெஷ்ட்’ வர்த்தகக் கண்காட்சி

டாக்டர்.ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் “எஸ்ஸென் ஃபெஷ்ட்” என்ற வர்த்தகக் கண்காட்சி சமீபத்தில் நடைபெற்றது.

இக்கண்காட்சியை கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் ராம கிருஷ்ணன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ரூபா மற்றும் நிர்வாக மேலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.

காரமடை, எஸ்.ஆர்.எஸ்.ஐ. பள்ளியின் செயலர் ஜெயக் கண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இக்கண்காட்சியில் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்று துரித உணவு, பிரியாணி உணவு வகைகள், அழகு சாதனப்பொருட்கள், புடவைகள், பொம்மைகள், மீன் மற்றும் சிக்கன் ரெசிபி உணவு வகைகள் மற்றும் விளையாட்டுத் திடல்கள் அடங்கிய 20க்கும் மேற்பட்ட கடைகளை விற்பனைக்காக வைத்திருந்தனர்.

இந்நிகழ்வில் அனைத்துத்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.