கோவை ஸ்டேட் வங்கி சாலையில் குழாய் பதிக்கும் பணியால் போக்குவரத்தில் மாற்றம்

கோவை ஸ்டேட் வங்கி சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி தொடங்கியதால் இன்று முதல் 12 ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகர் ஸ்டேட் வங்கி சாலையில் இன்று மாநகராட்சி மூலம் குடிநீர் குழாய் பதிக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணி வருகிற 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதையொட்டி ஸ்டேட் வங்கி சாலை, ஒரு வழி பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி அவினாசி சாலையில் இருந்து ரயில் நிலையம் வழியாக செல்லும் நகர பஸ்கள், கார் மற்றும் சரக்கு வாகனங்கள் அனைத்தும் உப்பிலிபாளையம் சிக்னல் சென்று அங்கு இருந்த அவினாசி சாலை மேம்பாலம் வழியாக குட்ஷெட் சாலையை அடைந்து உக்கடம் செல்லலாம்.

மேலும் அவினாசி சாலை அண்ணாசிலை சந்திப்பில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் ஓசூர் சாலை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலைய ரவுண்டானா கே.ஜி. தியேட்டர் சந்திப்பு பகுதிக்கு சென்று அரசு கலைக்கல்லூரி சாலை வழியாக அரசு ஆஸ்பத்திரியை அடைந்து லங்கா கார்னர் வழியாக உக்கடம் மற்றும் ரயில்நிலையம் செல்லலாம்.

அவினாசி சாலை மேம்பாலம் மற்றும் நஞ்சப்பா சாலையில் இருந்து ரயில்நிலையம் வழியாக செல்ல வேண்டிய இருசக்கர வாகனங்கள் உப்பிலிபாளையம் சந்திப்பு, செஞ்சிலுவை சங்கம் சந்திப்புக்கு சென்று ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலைய ரவுண்டானா சென்று அங்கிருந்து கே.ஜி.தியேட்டர் வழியாக அரசு கலைக்கல்லூரி சாலையை அடைந்து லங்கா கார்னர் வழியாக ரயில்நிலையம் அல்லது திருச்சி சாலைக்கு செல்லலாம்.

இதுதவிர திருச்சி சாலை மற்றும் உக்கடத்தில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம்போல் ஒருவழி பாதையில் ரயில்நிலையம் வழியாக செல்லலாம்.