ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் 781 ஆக உயர்வு

தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக பரவிய ஒமைக்ரான் வைரஸ், அனைத்து நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் நேற்று வரையில் இந்த வைரஸ் 600 பேருக்கும் மேல் பாதித்திருந்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 781 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே 34 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ள நிலையில் நேற்று மேலும் 11 பேருக்கு இந்த தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டிலேயே அதிக எண்ணிக்கையாக டெல்லியில் 238 பேருக்கும், மராட்டிய மாநிலத்தில் 167 பேரும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் குஜராத்தில் 73 பேருக்கும், கேரளாவில் 65 பேருக்கும், தெலுங்கானாவில் 62 பேருக்கும், ராஜஸ்தானில் 46 பேருக்கும், கர்நாடகத்தில் 34 பேருக்கும், தமிழ்நாட்டில் 34 பேருக்கும், அரியானாவில் 12 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் 11 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 9 பேருக்கும், ஒடிசாவில் 8 பேருக்கும், ஆந்திராவில் 6 பேருக்கும், உத்தரகாண்டில் 4 பேருக்கும், சண்டிகாரில் 3 பேருக்கும், ஜம்மு காஷ்மீரில் 3 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 2 பேருக்கும், கோவாவில் ஒருவருக்கும், இமாச்சல பிரதேசத்தில் ஒருவருக்கும், லடாக்கில் ஒருவருக்கும், மணிப்பூரில் ஒருவருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.