காங்கிரஸ் கட்சியின் நிறுவன ஆண்டு விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 137 வது நிறுவன ஆண்டு விழாவை முன்னிட்டு கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பொது மக்களுக்கு சேலை வேஷ்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சி துவங்கி 137 வது நிறுவன ஆண்டு விழாவை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் மாநில பொதுசெயலாளர் கே.எஸ்.மகேஷ் குமார் தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 137 வது நிறுவன ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பெருந்தலைவர் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 137 வது துவக்க ஆண்டை கொண்டாடும் விதமாக அந்த பகுதி ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன..

இந்நிகழ்ச்சியில், கவுண்டம்பாளையம் சர்க்கிள் தலைவர் மகேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் பரமசிவம் கோபி, இராம் மனோகர், மார்ட்டின், கணபதி சிவகுமார், மாநில இளைஞரணி துணை தலைவர் நவீன், மாநில செயலாளர் விஜயகுமார், பழையூர் செல்வராஜ், மாநகர மாவட்ட பொருளாளர் சௌந்தர் குமார், ,மாவட்ட நிர்வாகிகள் பாஸ்கர், சந்தோஷ், அசோக், தாமஸ் வர்கீஸ், சௌந்தரராஜ், ரகுராம், குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.