இந்திய தர வட்ட குழுவின் 35-வது தேசிய மாநாடு

இந்தியா முழுவதும் தொழில் துறை மற்றும் பல்வேறு துறைகளில் தரமான கருத்துக்கள் மற்றும் புதிய மாற்றங்களை ஊக்குவிக்கும் வகையில் QCFI எனும் இந்திய தர வட்ட குழு 34 சாப்டர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவையில் இதன் 35 வது தேசிய அளவிலான மாநாடு இன்று கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் எமரால்ட் இன்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் துவக்கி வைத்தார்.

மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டில் பணியாளர்களை தரமான கருத்துக்கள் மூலமாக ஈடுபடுத்தி இந்தியாவை உலக தலைமையாக்குதல் எனும் தலைப்பில் நடைபெற்ற இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தொழில் துறை மற்றும் பல்வேறு துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் தரத்தலைவர்கள், ஆய்வாளர்கள், தரக்கட்டுப்பாட்டு மேற்பார்வையாளர்கள், பொறியாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், மனிதவள வல்லுனர்கள், மேலாண்மை மற்றும் தர ஆலோசகர்கள், மேலாண்மை மாணவர்கள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் நிர்வாகிகள் பலர் இந்த மாநாட்டின் மூலமாக பயன்பெற்றனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமெக்ஸ் அலாய்ஸ் நிர்வாக இயக்குனர் டாக்டர் நித்தியானந்தன் தேவராஜ் NCQC 21 நினைவு மலர் புத்தகத்தை வெளியிட்டார்.