கொரோனா குறித்த கூடுதல் தகவலை சீனா வெளியிட வேண்டும் – டெட்ரோஸ் அதானோம்

கொரோனா வைரசின் தோற்றம் குறித்த கூடுதல் தரவுகளையும், தகவல்களை சீனா வெளியிட வேண்டும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனாவின் உருமாற்றமான ஒமைக்ரான், டெல்டா வகையை விட வேகமாக பரவுவதாகவும், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என டெட்ரோஸ் அதானோம் கூறியிருந்தார்.

இது குறித்து அவர், கொரோனவிலிருந்து மீண்டவர்களையும் ஒமைக்ரான் தாக்குவதோடு, டெல்டாவை விட வேகமாக பரவி வருவதற்கான ஆதாரங்கள் உள்ளது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும், நோயிலிருந்து மீண்டவர்களும், மீண்டும் ஒமைக்ரானால் பாதிக்கப்படலாம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் தற்போது சீன அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் கொரோனாவின் தோற்றத்தை கண்டறியும் வரை கடினமான நாட்களை நாம் கடந்து தான் ஆக வேண்டும் என்றும், கொரோனா வைரசின் தோற்றம் குறித்த கூடுதல் தரவு மற்றும் தகவல்களை சீன அரசு வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறியும் வரை நாம் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டும், நாம் கடினமாக உழைக்க வேண்டும். ஏனென்றால் எதிர்காலத்தில் சிறப்பாகச் வாழ, தற்போது நடக்கும் விஷயங்களில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.