ஐந்தமிழ் விருதுகள் வழங்கும் விழா

ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் சார்பாக தமிழ் மொழிக்கு சிறப்பு செய்த வெவ்வேறு துறைகளை சார்ந்த ஐந்து நபர்களுக்கு விருது வழங்கும் விழா இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சிந்தனை கவிஞர் கவிதாசன் மற்றும் ரோட்டரி கிளப் துணை ஆளுநர் மாரப்பன் கலந்து கொண்டனர்.

சிந்தனை கவிஞர் கவிதாசன் அவர்களால் ஸ்வர்ணா சோமசுந்தரம் இசைத்தமிழ் மாமணி என்றும், தளபதி குமரேசன் நாடகத்தமிழ் மணி என்றும், மருதாசலம் அடிகளார் ஆன்மிகத்தமிழ் மாமணி என்றும் முனைவர் மோகன் அறிவியல்தமிழ் மாமணி என்றும், கோகுலன் இயற்றமிழ் மணி என்றும் பட்டங்களும், விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் ரோட்டரி கிளப் தலைவர் குருப்ரீத் சிங் வரவேற்புரை வழங்கினார்.

ப்ராஜெக்ட் சேர்மன் சேர்மேன் சித்ரா மனோகர் விருது பெறுபவர்களை அறிமுகப்படுத்தினார். ஏற்புரை வழங்கிய மருதாசலம் அடிகளார்,  “கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் பல்வேறு ஆக்கப் பணிகளை செய்து வருகிறது. ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகள், பள்ளிகளை செப்பனிடுதல் உள்ளிட்ட சேவைகளை செய்து சிறப்பான அமைப்பாக விளங்குகிறது.

ஆன்மிகம், இரண்டிற்கும் ஒற்றுமை இருக்கிறது. இரண்டிற்கும் ஒற்றுமை இருக்கிறது. இதை நம் முன்னோர்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.

அதனால் தான் மக்களுக்கு தேவையான கருத்துகளை இலக்கியங்களை ஆன்மிகத்துடன் இணைந்து சொன்னார்கள். ஐந்து நிலத்திற்கும் ஐந்து கடவுள்களை வைத்து வழிபட்டார்கள்.

பேரூர் ஆதினம் அமைப்பானது புலாலை மறுக்க வேண்டும். பிற உயிர்களை மறுக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துகளை வழங்கி வருகிறது” என்றார். அடுத்து பேசிய சிறப்பு விருந்தினர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன், “பாரதி, பாரதிதாசன் வள்ளுவர் உள்ளிட்டவர்கள் நம் தமிழ் மொழிக்கு அளப்பரிய சிறப்பு செய்துள்ளனர். இன்றைய தலைமுறைக்கு தமிழ் துளியும் தெரியவில்லை. காலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அங்கிருந்தவர்களுக்கு தமிழ் நன்றாகத் தெரியும்.

ஆனால் அவர்கள் ஆங்கிலத்தில் தான் உரையாடி னார்கள். இறுதியாக பேசிய நான் இப்போதே நாம் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருக்கிறோம்.

நம் பின்னே வரும் தலைமுறைகளுக்கு எப்படி தமிழ் தெரியும் என்றேன். முட்டைக்குள் இருக்கும் கோழி குஞ்சானது உள்ளிருந்து திறந்தால் அது பிறப்பு. அதை வெளியல் இருந்து திறந்தால் இறப்பு. வாழ்க்கையும் அப்படி தான்.

எதையும் நேர்மறையாக அணுக வேண்டும். அனைவருக்கும் வாசிப்பு பழக்கம் வேண்டும்.

வாசிப்பு என்றால் செய்திதாள்களை படிப்பது அல்ல. தினமும் ஒரு வரி தான் படிக்க முடியும் என்றால், பாரதியாரின்  ஆத்திசூடியை படியுங்கள். இரண்டு வரி தான் படிக்க முடியும் என்றால் திருக்குறளை படியுங்கள். அதில் இல்லாத கருத்துக்களே இல்லை என்றார்.

 

ஐந்தமிழ் விருதுகள் பெற்றவர்களுடன் சிறப்பு விருந்தினர்கள்  சிந்தனை கவிஞர் கவிதாசன்,ரோட்டரி கிளப் துணை ஆளுநர் மாரப்பன் மற்றும் ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் சங்க தலைவர் குருப்ரீத் சிங் மற்றும் உறுப்பினர்கள்.