பீளமேட்டின் புதுவரவாக பில்லர்- 129 ரெஸ்டாரன்ட் திறப்பு

கோவை அவினாசி ரோட்டில் அரை ஏக்கர் பரப்பளவில் புதிதாக அமைந்துள்ள ‘பில்லர்- 129’ என்ற மல்டிகுசைன் ரெஸ்டாரன்டின் திறப்பு விழா திங்கட்கிழமை நடைபெற்றது.

கோயமுத்துார் ஓட்டல்கள் சங்கத் தலைவரும், அன்னபூர்ணா குரூப் ஆப் ஹோட்டல்சின் சேர்மனுமான ஸ்ரீனிவாசன் மற்றும் சிங்காநல்லூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

நிக்வின் ஹாஸ்பிட்டாலிட்டி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் உமா மற்றும் அதன் நிர்வாக இயக்குனரும் நேஷனல் மாடல் பள்ளித் தாளாளருமான மோகன் சந்தரின் புது முயற்சியால் இந்த ரெஸ்டாரண்ட் தொடங்கப்பட்டுள்ளது.

நிக்வின் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் சார்பில், சித்தாபுதுாரில் 2016 ம் ஆண்டில் இருந்து ‘விருந்தோம்பல்’ என்ற தென்னிந்திய சைவ, அசைவ உணவகம் செயல்படுகிறது. வாடிக்கையாளர்களின் ஆதரவை தொடர்ந்து, பன்னாட்டு உணவுகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில், அவினாசி ரோட்டில், ‘பில்லர்-129’ என்ற, புதிய ரெஸ்டாரன்டை திறந்துள்ளனர்.

காலை, 11:00 முதல் இரவு 11:00 மணி வரை செயல்படும் இந்த ரெஸ்டாரண்டில், பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்வுகளை கொண்டாட ஏதுவாக, ‘பார்ட்டி ஹால்’ வசதி உள்ளது.

டிரைவ் இன் ரெஸ்டாரன்ட்டாக செயல்படவுள்ள இங்கு, ஒரே நேரத்தில் இருபதுக்கும் மேற்பட்ட கார்களை நிறுத்தி உணவு உண்ணும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த உணவகத்தில் சைனீஸ், தாய், மலாய், பர்மீஸ், அரேபியன் மற்றும் இந்தியன் கான்டினெண்டல் உணவுகளும் பரிமாறப்படுகிறது. டிரைவ் இன் உடன் சேர்ந்து, குளிர்சாதன வசதியுடன் 80 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் டைன்னிங் வசதியும் இங்கு அமைந்துள்ளது.

அவினாசி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் 129 வது தூணிற்கு நேராக அமைந்துள்ளதால் இந்த உணவகத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

(மேற்கண்ட செய்தி குறித்த விரிவான தகவல் இன்னும் சில மணி நேரத்தில்..)