பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கோரி ஒற்றைக் காலில் நின்று போராட்டம்

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி ஹிந்துஸ்தான் மக்கள் சேவை இயக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒற்றைக்காலில் நின்று போராட்டம் நடத்தினர்.

ஹிந்துஸ்தான் மக்கள் சேவை இயக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். தொடர்ந்து அவர்கள் ஒற்றைக் காலில் நின்று பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

“பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத வகையில் விலை உயந்துள்ளதால் சாமானியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆட்டோ டாக்சி ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

டீசலுக்கு 10 ரூபாயும், பெட்ரோலுக்கு 5 ரூபாயும் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. இது காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் கூட அமலுக்கு வந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரவில்லை. எனவே உடனடியாக விலையை குறைக்க வேண்டும்.” என்றனர்.