ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் எழுதிய பார்த்திபன்

தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் பார்த்திபன். தற்போது இவர் இரவின் நிழல் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பார்த்திபன் முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைகிறார். இந்நிலையில் இரவின் நிழல் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பார்த்திபன் பாடல் ஒன்றை எழுதியுள்ளார் .

இதுகுறித்து பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘இரவின் நிழல்- ஏ.ஆர்.ரஹ்மான் இசை ம்யூரல்! பின்னணி இசைக்காக அவர் குரலில் ஒரு ட்யூனை அனுப்பி என்னை எழுதச் சொன்னார். கேட்ட நொடி முதல் கிறங்கிக் கிடக்கிறேன் high-யில். இறங்கி வந்து அந்த abstract tune-க்கு வரி வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஒரு வாரம் மூழ்க, பதிவும் செய்யப்பட்டது. சங்குக்குள் அடக்கப்பட்ட கங்கை போல், முழு படத்தின் வீரியத்தையும் ஒரு பாடலில். சிலிர்த்து சிறகடித்து பறக்கிறேன் பரவசத்தில். ரசித்து சமைத்தால் தானே இலைக்கு (திரைக்கு) வரும்போது ருசிக்கும்” என பதிவிட்டுள்ளார்.

விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.